😋😱 பூரிக்கு 🔥இதைவிட சிம்பிளா சுவையா செய்ய முடியாது👌வெங்காய மசாலா 🎊🌺
🌺தேவையான பொருட்கள்!
🎊எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன்
🎊கடுகு அரை டீஸ்பூன்
🎊சீரகம் கால் டீஸ்பூன்
🎊 உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
🎊கடலை பருப்பு அரை டீஸ்பூன்
🎊பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
🎊 வெங்காயம் 3
🎊பச்சை மிளகாய் ஐந்து
🎊இஞ்சி 1/2 இன்ச்
🎊பூண்டு 5
🎊கருவேப்பிலை இரண்டு கொத்து
🎊 தக்காளி இரண்டு
🎊மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
🎊உப்பு தேவைக்கேற்ப
🎊தண்ணீர் இரண்டு கப்
🎊கடலை மாவு இரண்டு டேபிள் ஸ்பூன்
🎊 கொத்தமல்லி தழை
🌺செய்முறை!
🎊கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து லேசாக வதக்கி விடவும்.
🎊அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நீளமாக நறுக்கிய வெங்காயம், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடவும் .
🎊வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
🎊 துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
🎊பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும் .
🎊மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி கலந்து மூடி வைத்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும் .
🎊கடலை மாவை லேசாக வறுத்து அதில் 100 ml தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து விட்டு அதை வெங்காய மசாலாவில் சேர்த்து கலந்து விடவும் .
🎊மூன்று நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும் .
🎊அட்டகாசமான சுவையில் வெங்காய மசாலா தயார் .